நஜ்முல், மோமினுல் அரைசதம் | பெப்ரவரி 23, 2020

தினமலர்  தினமலர்
நஜ்முல், மோமினுல் அரைசதம் | பெப்ரவரி 23, 2020

தாகா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தாகா டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, கேப்டன் மோமினுல் ஹக் அரைசதம் கடந்தனர்.

வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தாகாவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் சகப்வா (30) ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வங்கதேசம் சார்பில் அபு ஜெயத், நயீம் ஹசன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (41) நல்ல துவக்கம் தந்தார். பொறுப்பாக ஆடிய நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (71), கேப்டன் மோமினுல் ஹக் அரைசதம் கடந்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து, 25 ரன்  பின்தங்கி இருந்தது. மோமினுல் (79), முஷ்பிகுர் ரஹிம் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை