கோப்பை வெல்ல வழி: ஜூலன் ‘அட்வைஸ்’ | பெப்ரவரி 23, 2020

தினமலர்  தினமலர்
கோப்பை வெல்ல வழி: ஜூலன் ‘அட்வைஸ்’ | பெப்ரவரி 23, 2020

‘‘இந்திய அணி வீராங்கனைகள் எவ்வித பதட்டமும் இன்றி சிறப்பாக செயல்பட்டால் தொடரில் சாதிக்க முடியும்,’’ என ‘சீனியர்’ ஜூலன் கோஸ்வாமி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வலுவான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ‘டாப்–2’ இடம் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லலாம். 

இதுகுறித்து இந்திய அணியின் ‘சீனியர்’ வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கூறியது:

கடந்த 2018 தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கிலாந்திடம் தோற்றோம். 

பொதுவாக அரையிறுதி என்பது சற்று வித்தியாசமானது. எந்த அணி வேண்டுமானாலும் வெல்லலாம். எவ்வித பதட்டமும் இன்றி சிறப்பாக செயல்பட்டால் சாதிக்க முடியும். இதேபோல 2017 ஒருநாள் உலக கோப்பை தொடர் லீக் சுற்றில் இங்கிலாந்தை வென்றோம். பைனலில் அந்த அணியிடம் தோல்வி கிடைத்தது. 

ஐ.சி.சி., தொடரில் கோப்பை வெல்வது மிக முக்கியம். இம்முறை ஹர்மன்பிரீத் கவுர் சிறந்த முன்னுதாரணமாக செயல்படுவார் என நம்புகிறேன். ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி உள்ளிட்ட பலரும் திறமை வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கோப்பை வென்றால், அது அடுத்த தலைமுறை பெண்கள் கிரிக்கெட்டை தேர்வு செய்ய துாண்டுகோலாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மூலக்கதை