'எஸ்கார்ட் 2020'! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ... துவங்கியது மீட்புக்குழு

தினமலர்  தினமலர்
எஸ்கார்ட் 2020! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ... துவங்கியது மீட்புக்குழு

மதுரை : மதுரையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் 'எஸ்கார்ட் 2020' என்ற பெயரில் மீட்புக்குழு துவக்கப்பட்டது.

தலைவர் விஜயசரவணன் கூறியதாவது: கணவருடனான பிரச்னையில் குழந்தையுடன் ஒரு பெண் மதுரை வந்தார். அவரிடம் விசாரித்து தந்தையிடம் சேர்த்தோம். குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 'எஸ்கார்ட் 2020' என்ற பெயரில் மீட்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு குழந்தைகள் நலனுக்காக பாடுபடும். விபரங்களுக்கு 97895 15915ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

மூலக்கதை