ஒரே தேசமாக சிந்தியுங்கள் காங்கிரசுக்கு பாஜ அழைப்பு

தினகரன்  தினகரன்
ஒரே தேசமாக சிந்தியுங்கள் காங்கிரசுக்கு பாஜ அழைப்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம் அவருக்கான தேர்தல் பிரசாரமாக இருந்து விடாமல், இந்தியாவுக்கு பலன் அளிக்க வேண்டும்’ என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் விமர்சித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜ செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று அளித்த பேட்டியில், ``மோடி-டிரம்ப் சந்திப்பானது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் தொன்மை வாய்ந்த இரு ஜனநாயக நாடுகளின் சந்திப்பாகும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் மதிப்பு உயர்வது காங்கிரசுக்கு ஏன் பிடிக்கவில்லை. இது போன்ற நேரங்களில் ஒரே தேசமாக சிந்தியுங்கள்,’’ என்றார்.

மூலக்கதை