புதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்

தினகரன்  தினகரன்
புதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்

சென்னை: ஹோண்டா நிறுவனம்,  125 சிசி மோட்டார் பைக்கை புதிய மேம்படுத்தப்பட்ட வாகனத்தை ஷைன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.  அடுத்த தலைமுறை வாகனம் ஷைன் விலை ரூ67, 857.  புதிய அம்சங்கள் நிறைந்த ஹோண்டா ஷைன் பிஎஸ் -6 வாகனம் இப்போது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் 14 சதவீத கூடுதல் மைலேஜ் அம்சங்களுடன் வருகிறது. இதில் பொருத்தப்பட்ட 125 சிசி இன்ஜின், ஈஎஸ்பி (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) மூலம் இயக்கப்படுகிறது மேலும், பி.எஸ்.-6  ஷைன் வாகனம், புதிய தொழில்நுட்பத்துடன் 14 சதவீதம் அதிக மைலேஜ் தருகிறது. புதிய 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மென்மையான மற்றும் திறன் வாய்ந்த சவாரியை வழங்குகிறது. புதிய டிசி ஹெட்லேம்ப் வசதியானது, மெதுவான வேகத்தில் செல்லும்போதும் மற்றும் இரவு சவாரிக்கும் நீடித்த வெளிச்சத்தை வழங்குகிறது. புதிய இஞ்சின் ஸ்டார்ட் செய்ய, நிறுத்த ஒற்றை சுவிட்ச்; புதிய ஒருங்கிணைந்த ஹெட்லேம்ப் பீம் & பாஸிங் சுவிட்ச்  ஆகிய இரு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த ஒற்றை சுவிட்ச் வசதி உண்டு. சிறப்பு 6 ஆண்டு உத்தரவாத தொகுப்பு: ஷைன் பி.எஸ்.-6 வாகனங்கள், டிரம் & டிஸ்க் என இரண்டு வகைகளில் கிடைக்கும், நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் மினோரு கடோ, “அடுத்த சகாப்தத்துக்கான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஹோண்டா, ஏற்கனவே 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அதன் மேம்பட்ட பி.எஸ்.-6 மாடல்கள். மூலம் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் எங்கள் வணிக விரிவாக்கத்தை மேலும் பலப்படுத்தும்.\' என்றார்.

மூலக்கதை