அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா மகளான பிரியங்கா அவரது டுவிட்டரில்; அதிபர் டிரம்பின் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக அறிகிறேன். இந்த பணம் ஒரு குழு மூலம் செலவிடப்படுகிறது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது. அக்குழுவுக்கு எந்த அமைச்சகம் எவ்வளவு பணம் கொடுத்தது ? இது போன்ற விவரத்தை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அரசாங்கம் ஏன் மறைக்கிறது? என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை