தங்கத்தின் விலை இன்றும் உச்சத்தை தொட்டது: பவுன் 32,500ஐ தாண்டியது...மேலும் உயரும் என தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கத்தின் விலை இன்றும் உச்சத்தை தொட்டது: பவுன் 32,500ஐ தாண்டியது...மேலும் உயரும் என தகவல்

சென்னை: தங்கத்தின் விலை இன்றும் உச்சத்தை தொட்டது. பவுன் ரூ. 32 ஆயிரத்து 576க்கு விற்பனையானது.

நேற்றை விட இன்று பவுனுக்கு ரூ. 168 உயர்ந்தது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராம் ரூ. 4012க்கு விற்பனையானது.

மாலையில் அந்த விலை ரூ. 39 உயர்ந்து ரூ. 4051க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ. 312 உயர்ந்து ரூ. 32,408க்கு விற்பனையானது.

இன்றும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 21 உயர்ந்து பவுனுக்கு ரூ. 4072க்கு விற்பனையானது.

இதனால் பவுனுக்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 32,576க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மாலையிலும் தங்கத்தின் விலை மாற்றம் இருக்கும்.

இன்று விற்பனையாவும் விலைதான் நாளையும் நீடிக்கும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த சில நாட்களாக அமெரிக்கா- சீனா வர்த்தக போர், ஈரான் ராணுவ தளபதி மீது தாக்குதல், ஈரான் போர் பதட்டம் என்று ஒவ்வொரு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவின் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் பல நாடுகளில் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

அதில், தங்கத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவது வெகுவாக குறைந்து வருகிறது.

.

மூலக்கதை