ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை

தினகரன்  தினகரன்
ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை

டோக்கியோ : ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யோகஹாமா துறைமுகத்தில் பிப்ரவரி 3ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் என்ற பிரமாண்ட கப்பலில் கொரோனா வைரசு தொடர்ந்து பரவி வருகிறது. மொத்தம் உள்ள 3,700 பேரில், வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது, ஏற்கனவே 2 பேர் உயிழந்துள்ளதால் தங்கள் நாட்டு பயணிகளை அந்தந்த நாடுகள் பத்திரமாக அழைத்து சென்று வருகின்ற்னர். ஆனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை பிரித்து அறிய முடியவில்லை என்று ஜப்பான் அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் மொத்தம் 138 பேர் உள்ளனர்.அவர்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் உடல்நிலை தேறி வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்து இருக்கிறது. 19ம் தேதிக்குள் கப்பலில் இருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பது இலக்காகும். ஆனால் அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஜப்பான் நகரில் 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை