இந்தியாவில் முதலீடுகள் குவிந்து வரும் போதிலும் பணவீக்கம் அதிக…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இந்தியாவில் முதலீடுகள் குவிந்து வரும் போதிலும் பணவீக்கம் அதிக…

இந்தியாவில் முதலீடுகள் குவிந்து வரும் போதிலும் பணவீக்கம் அதிக அளவில் நீடிப்பதால் கடன் வட்டியை குறைக்க இயலாத நிலை உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், உலகம் முழுவதும் மைய வங்கிகள் கடன் வட்டியை குறைத்து வந்தாலும், ரிசர்வ் வங்கியால் அதை செய்ய முடியாமல் இருப்பதாகவும் கூறினார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வட்டியை குறைக்குமாறு அரசும், தொழில் துறையும் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராஜன் தெரிவித்தார். எனினும், பணவீக்கத்தை குறைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருப்பதால், இந்த விஷயத்தில் அவசரம் காட்ட முடியவில்லை என்றும் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்தார்.

மூலக்கதை