டிஎன்பிஎல் சீசன்-5 ஏலம்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் சீசன்5 ஏலம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) தொடரின் 5வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில்   633 வீரர்கள் பங்கேற்றனர். ஏ பிரிவு வீரர்கள் 6லட்ச ரூபாயக்கும்,  பி1, பி2 பிரிவு வீரர்கள் 2 முதல் 3 லட்ச ரூபாய்க்கும், சி பிரிவு வீரர்கள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரையிலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியும் 16 முதல் 22 வீரர்களை வாங்கினர். இந்த முறை டூட்டி பேட்ரியாட்ஸ் அணி ‘சேலம் ஸ்பார்டன்ஸ்’ என்றும், காரைக்குடி காளை ‘திருப்பூர் தமிழன்ஸ்’ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. எஞ்சிய அணிகளின் பெயரில் மாற்றமில்லை. இந்த ஆண்டு டிஎன்பிஎல் ஜூன் 10 முதல் ஜூலை 12ம் தேதி வரை திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம், கோவை நகரங்களில் நடக்கும். உமர் அக்மல் நீக்கம்பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல்-2020 போட்டி நேற்று மாலை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அக்மல் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நடவடிக்கைக்கான காரணத்தை வாரியம் விளக்காவிட்டாலும், ‘வார்த்தை பிழையே’ வம்புக்கு காரணம் என கூறப்படுகிறது பிஎஸ்எல் தொடரின் நடப்பு சாம்பியனான  குவெட்டா கிளேடியேட்டர் அணிக்காக அக்மல் விளையாட இருந்தார்.குடும்ப வன்முறை புகார்இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் லதாதேவி சூரஜ். அவரது கணவர்  சாந்தா சிங்  திருமணமான 2005ம் ஆண்டு முதல் உடல், மனரீதியாக கொடுமைபடுத்தியதாக மணிப்பூர் காவல்துறையிடம் ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய லதாதேவி, ‘பதக்கங்களை வென்று வரும் போது கேலி செய்வார். தவறான நடத்தை காரணமாக அர்ஜுனா விருது வென்றதாக அசிங்கப்படுத்தினார். இத்தனை நாட்கள் அவர் மாறுவார் என்று காத்திருந்தேன். பலனில்லாததால் புகார் தந்தேன்’ என்று கூறினார்.

மூலக்கதை