பெண்கள் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம் : முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்

தினகரன்  தினகரன்
பெண்கள் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம் : முதல் போட்டியில் இந்தியாஆஸ்திரேலியா மோதல்

சிட்னி: கிரிக்கெட் உலகின் அடுத்த திருவிழாவாக 7வது ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பை  போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாகவும், தகுதிச் சுற்றுப் போட்டி மூலம் வங்கதேசம்,  முதல்முறையாக தாய்லாந்து அணியும் தேர்வு செய்யப்பட்டன.  மார்ச் 3ம் தேதி இறுதிப்போட்டி நடக்கும்.சாதிக்குமா இந்தியா: இதுவரை நடைபெற்ற 6 உலக கோப்பை ேபாட்டிகளிலும் பங்கேற்ற இந்தியா இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால்  2009, 2010, 2018 ஆண்டுகளில் என 3முறை மட்டும் அரையிறுதியை எட்டியுள்ளது.இந்த முறை அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள அணியாக  இந்தியா உள்ளதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்ப வெஸ்ட் இண்டீஸ் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்று கணக்கை தொடங்கியுள்ளது. கூடவே கடந்த 6 உலக கோப்பை ெதாடர்களில் விளையடிய அனுபவமிக்க மிதாலி ராஜ், ஜாலன் கோஸ்வாமி  இல்லாததை இளம் வீராங்கனைகள் ஈடுகட்டுவார்கள். இன்று முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர்,  தானியா பாட்டீயா, ஹர்லீன் தியோல், ராஜஸ்வரி கெயக்வாட், ரிச்சா கோஷ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிரிதி மந்தானா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, பூஜா வாஸ்ட்ரகர், ராதா யாதவ்.

மூலக்கதை