நாடு சுதந்திரம் பெற்ற போதே முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும் : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

தினகரன்  தினகரன்
நாடு சுதந்திரம் பெற்ற போதே முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும் : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாட்னா : நாடு சுதந்திரம் பெற்ற போதே முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் புன்னையாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 1947ம் ஆண்டுக்கு முன்பே முகமது அலி ஜின்னாஹ் இஸ்லாமிய நாட்டுக்காக அழுத்தம் கொடுத்ததாக கூறினார். அப்போது நமது முன்னோர்கள் செய்த தவறுக்கு தற்போது விலை கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.முஸ்லீம்களை அனுப்பிவிட்டு இந்துக்களை அளித்திருக்க வேண்டும் என்று கிரிராஜ் சிங் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி பிரதமர் மோடி தெளிவாக பேசியிருப்பதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து அகதிகளுக்கு இங்கு இடம் இல்லை எனில் அவர்கள் எங்கே போவார்கள் என்று கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பினார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு ஆதரவாகவும் பகீரங்கமாக கருத்துக்களை கிரிராஜ் சிங் கூறி வருகிறார். பாஜக தலைமை பல முறை கண்டித்தும் அதனை கிரிராஜ் சிங், பொருட்படுத்துவதில்லை.  

மூலக்கதை