டெல்லியில் இருந்து நொய்டா மற்றும் ஃபரிதாபாத் செல்ல மாற்று பாதையை ஏற்பாடு செய்தது உ.பி. காவல்துறை

தினகரன்  தினகரன்
டெல்லியில் இருந்து நொய்டா மற்றும் ஃபரிதாபாத் செல்ல மாற்று பாதையை ஏற்பாடு செய்தது உ.பி. காவல்துறை

உ.பி: டெல்லியில் இருந்து நொய்டா மற்றும் ஃபரிதாபாத் செல்ல மாற்று பாதையை உ.பி. காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஷாகீன்பாக் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப் பாதையானது திறக்கப்பட்டுள்ளது. மகாமாயா மேம்பாலத்தின் வழியாக வாகனப் போக்குவரத்தை உத்தரப்பிரதேச காவல்துறை அனுமதித்துள்ளது. போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஷாகீன்பாக் மக்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் போக்குவரத்துக்கு புது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை