தென்னிந்திய குண்டு எறிதல் போட்டி: அருப்புக்கோட்டை மாணவர் சாதனை

தினகரன்  தினகரன்
தென்னிந்திய குண்டு எறிதல் போட்டி: அருப்புக்கோட்டை மாணவர் சாதனை

அருப்புக்கோட்டை: தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் அருப்புக்கோட்டை மாணவர் சாதனை படைத்தார். தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டி சென்னை வேலம்மாள் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் நவீன் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி செயலாளர் சரவணன், தாளாளர் பார்த்தீபன், பள்ளி முதல்வர் ராஜசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

மூலக்கதை