ஐஎஸ்எல் அரையிறுதியில் யார் மும்பை-சென்னை இன்று மோதல்

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் அரையிறுதியில் யார் மும்பைசென்னை இன்று மோதல்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6வது சீசன் லீக ்போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கோவா, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் மும்பை 26 புள்ளி, சென்னை 25புளளி, ஓடிஷா 24புள்ளியுடன் காத்திருக்கின்றன. அந்த ஒரு இடம் யாருக்கு என்பது இன்று நடக்கும் மும்பை சிட்டி எப்சி-சென்னையின் எப்சி போட்டியில் தெரியலாம். மும்பை அணி இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 29 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்துவிடும்.  டிரா செய்தால் அரையிறுதி வாய்ப்பு குறைந்து விடும். சென்னை, ஓடிஷா அணிகளின் வெற்றித் தோல்விக்காக காத்திருக்க வேண்டும்.அதே நேரத்தில் சென்னையும் வெற்றி பெற்றால் 28 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்து விடும். ஒருவேளை டிரா ஆனால் 26 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். வரும் 25ம் தேதி நார்த்ஈஸ்ட் அணியுடனான கடைசி லீக் போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதி உறுதியாகும். அந்தப் ேபாட்டியும் டிரா என்றால் ஓடிஷா-கேரளா மோதும் போட்டியின் முடிவை பொறுத்து சென்னைக்கு வாய்ப்பு.   ஆக அரையிறுதியில் நுழைய, இன்றைய போட்டியில் வெற்றியை வசமாக்க மும்பை மல்லுக்கட்டும். ஆனால் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத சென்னையும் வேகம் காட்டும். இந்த 2 அணிகளும் ஏற்கனவே சென்னையில் மோதிய லீக் போட்டி டிரா ஆனது.

மூலக்கதை