உச்ச நீதிமன்றத்தில் சிஏஏ.வை எதிர்த்து மேலும் 15 வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றத்தில் சிஏஏ.வை எதிர்த்து மேலும் 15 வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் 15 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள், அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை கடந்த மாதம் 22ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,  மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு 4 வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களுக்கும் மத்திய அரசு பதிலளிக்க தலைமை நீதிபதி பாப்டே அமர்வு நேற்று உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 150 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே வழக்காக இணைத்து, அடுத்த மாதம் முதல் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

மூலக்கதை