ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மேலும் 19,950 கோடி

தினகரன்  தினகரன்
ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மேலும் 19,950 கோடி

புதுடெல்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 19,950 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.  ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, மாநிலங்களின் வரி வருவாய் குறைந்தால் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளித்தது. கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இதுவரை மாநிலங்களுக்கு இழப்பீடாக 2.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியதால், கடைசியாக கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்துக்கு இழப்பீடாக 35,298 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டியால் வரி வசூல் குறைந்த மாநிலங்களுக்கு மேலும் ₹35,000 கோடி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இழப்பீடாக 19,950 கோடி கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை