பிரதமருக்கு மம்தா கடிதம் நிதியை குறைப்பது கவலை அளிக்கிறது

தினகரன்  தினகரன்
பிரதமருக்கு மம்தா கடிதம் நிதியை குறைப்பது கவலை அளிக்கிறது

கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:மேற்கு வங்கத்துக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு படிப்படியாக குறைந்து  வருவது மிகுந்த கவலையளிக்கிறது. குறைவான இந்த நிதியும் மிகவும் தாமதமாகவே  வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி வரை, மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ₹50 ஆயிரம் கோடி நிதி இதுவரை  கிடைக்கவில்லை. இந்த அசாதாரண சூழலால், மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு  நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை