ஹரியானாவில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஹரியானாவில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

ஹரியானாவில் முதலமைச்சர் மனோஹர் லால் கத்தாரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

முதலமைச்சர் மனோஹர் லால் கத்தார் சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது. அவரது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று சாலையோரம் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியது. விபத்து நேர்ந்த உடன் மனோஹர் லால் கத்தார் பயணத்தை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியுள்ளார். உயிரிழந்த நபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த இரண்டு காவலர்களும் காயமடைந்தனர்.

மூலக்கதை