ராமர் கோயில் அறக்கட்டளை குழு மோடியுடன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
ராமர் கோயில் அறக்கட்டளை குழு மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, ‘ ராம்ஜன்மபூமி தீர்த்த சேத்ரா’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக அயோத்தியை சேர்ந்த சாமியார் நிருத்ய கோபால் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். விஎச்பி தலைவர் சம்பத் ராய் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ராமர் கோயில் கட்டுமான குழு தலைவராக, பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இவர்கள் பிரதமரை டெல்லியில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர்.

மூலக்கதை