போக்குவரத்து விதி மீறல் வழக்கு விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
போக்குவரத்து விதி மீறல் வழக்கு விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  போக்குவரத்து விதிமீறல், ரயில்வே குற்றங்கள், தொழில் செய்யும் இடங்களில்  நடக்கும் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க காலதாமதம் ஏற்படுவதாக  புகார் கூறப்பட்டு வந்தது. எனவே இதுபோன்ற வழக்குகளை உடனடியாக விசாரித்து  தீர்ப்பு அளிக்க கேரள உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. இதன்படி  இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம் அமைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்போன்களில் புதிய ஆப்  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய  நீதிபதிகளை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு நகரங்களில் ஏப்.1 முதல் இந்த  ஆன்லைன் நீதிமன்றம் செயல்படுகிறது.

மூலக்கதை