மாநில தடகள போட்டி: அரசு பாலிடெக்னிக் மாணவி சாதனை

தினகரன்  தினகரன்
மாநில தடகள போட்டி: அரசு பாலிடெக்னிக் மாணவி சாதனை

நாகர்கோவில்: மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டி கோவில்பட்டி லெட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை 3ம் ஆண்டு மாணவி ஜோஷி ஷியானா பங்கேற்றார். 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்றார். அதைத்தொடர்ந்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடக்கும் தென் இந்திய அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார். மாநில அளவிலான போட்டியில் தங்கபதக்கம் பெற்ற மாணவி ஜோஷி ஷியானாவை கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுகநயினார், துணை முதல்வர் பெருமாள்பிள்ளை, உடற்கல்வி இயக்குநர் முனைவர் சுப்ரதீபன் ஆகியோர் பாராட்டினர்.

மூலக்கதை