கேரளாவில் ஏப்ரல் 1 முதல் சிறு வழக்குகளை விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் ஏப்ரல் 1 முதல் சிறு வழக்குகளை விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் நீதிமன்றம் ஏப்ரல் 1 முதல் செயல்பட தொடங்குகிறது. கேரளாவில் போக்குவரத்து விதிமீறல், ரயில்வே குற்றங்கள், தொழில் செய்யும் இடங்களில் நடக்கும் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க காலதாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.

எனவே இதுபோன்ற வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பு அளிக்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க ஆன்லைன் நீதிமன்றம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இதற்காக செல்போன்களில் புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற வழக்குகள் இந்த ஆப் மூலம் உடனடியாக வழக்குகள் முடித்து வைக்கப்படும்.

இதற்காக புதிய நீதிபதிகள் நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகர்களில் ஏப்ரல் 1 முதல் இந்த ஆன்லைன் நீதிமன்றம் செயல்படுகிறது.

.

மூலக்கதை