கொலை வழக்கில் ஆஜரானவரின் தலைமுடியை வெட்ட சொன்ன நீதிபதி: நீதிமன்றத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொலை வழக்கில் ஆஜரானவரின் தலைமுடியை வெட்ட சொன்ன நீதிபதி: நீதிமன்றத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (28). கட்டிட மேஸ்திரி.

இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கு ெதாடர்பாக போலீசார் கைது செய்தனர். நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரணைக்காக ரஞ்சித்தை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். நீதிபதி வழக்கை விசாரித்த போது ரஞ்சித் குற்றவாளி கூண்டில் நின்றார்.

அப்போது அவரது தலைமுடியை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். தலைமுடியை மிக நீளமாக, பல்வேறு கோணங்களில் வளர்த்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி அவரை தன் அருகில் அழைத்து என்ன வேலை பார்க்கிறாய்? என்று கேட்டார்.

அவர் மேஸ்திரியாக வேலை செய்வதாக கூறினார்.

இதுபோல் தலைமுடியை வளர்த்து மற்றவர்களை பயமுத்த கூடாது. தலை முடியை வெட்டி வந்தால்தன் வழக்கை விசாரிப்பேன் என்று கூறினார்.

இதையடுத்து ரஞ்சித் வெளியே சென்று நீதிமன்ற நுழைவு வாயில் அருகில் நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அங்கே நின்ற பிறகும் நீதிபதி அவரை அழைக்கவில்லை.

இதையடுத்து வேறு வழியில்லாமல் வெளியே சென்று தலைமுடியை வெட்டி வந்தார். அதன்பிறகு நீதிபதி அவரை கூண்டில் நிற்க வைத்து விசாரணையை தொடங்கினார்.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை