மகா சிவராத்திரி, அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகா சிவராத்திரி, அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகா சிவராத்திரி, மாசி அமாவாசையையொட்டி நாளை முதல் 24ம் தேதி வரை, 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது.

அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இடைப்பட்ட விடுமுறை நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

நாளை மகாசிவராத்திரி, பிரதோஷம் மற்றும் வரும் 23ம் தேதி அமாவாசை வருகிறது.

இதனையொட்டி நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரதோஷத்தை ஒட்டி, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அன்று இரவு மகா சிவராத்திரியை ஒட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.

23ம் தேதி மாசி அமாவாசை வருகிறது. எனவே, நாளை மற்றும் அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


.

மூலக்கதை