நைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி

தினகரன்  தினகரன்
நைஜர் அகதிகள் நிவாரண கூட்ட நெரிசலில் 22 பேர் பலி

நியாமி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அண்டை நாடான நைஜரில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகள் நைஜரின் டிபா நகரில் இருக்கும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.     இந்நிலையில் நைஜீரியாவின் போர்னே மாகாண கவர்னர் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. இதனை, பெறுவதற்காக மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முன்னால் சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 22 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை