சச்சின் பதிவிட்ட புகைப்படம் நா உங்கள தப்பா சொல்லல..! மகிழ்ச்சியின்றி கருத்து பதிவிட்ட கங்குலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சச்சின் பதிவிட்ட புகைப்படம் நா உங்கள தப்பா சொல்லல..! மகிழ்ச்சியின்றி கருத்து பதிவிட்ட கங்குலி

மும்பை:சமீபத்தில்  ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்கு லாரியஸ் விருது பெறுவதற்காக ஜாம்பவான் சச்சின் சென்றிருந்தார். அங்கிருந்து அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இவர் பதிவிட்ட சிறிது நேரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஒரு கிண்டலான கமெண்ட்டுடன் பதிலளித்தார். சமீபத்தில் சச்சின் பதிவிட்ட புகைப்படத்துக்கு, அவர் அதிகமான விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதாக கங்குலி கூறியிருந்தார்.

அதனால், அந்த கமெண்ட்டை நினைவுப்படுத்தி இப்போது, “டெண்டுல்கர். நான் தவறாக கூறவில்லை” என்று கங்குலி கமெண்ட் செய்துள்ளார்.



‘விடுமுறையை கொண்டாட சிலருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது’ என்று டெண்டுல்கரின் பதிவில் கங்குலி ஹிந்தியில் கமெண்ட் செய்திருந்தார். கங்குலிக்கு பதிலளித்த டெண்டுல்கர், ‘புஷ் ஃபயர் கிரிக்கெட் பேஷின்போது அவர்கள் (ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் லெவன் மற்றும் கில்கிறிஸ்ட் லெவன் ஆகிய இரு அணிகள்) 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியதால், அது ஒரு பயனுள்ள விடுமுறையாக இருந்தது’ என்று தெரிவித்திருந்தார்.


.

மூலக்கதை