டெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்

தினகரன்  தினகரன்
டெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்

டெல்லி: டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு பிரதமர் மோடி திடீரென வருகை தந்து ஆச்சரியப்படுத்தினார். மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி ராஜ்பாத்தில்,  கைவினைப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 13ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ள இந்த பொருள்காட்சிக்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள்  வருகை வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் இருந்து பெண்கள் உள்பட கைவினைஞர்கள், கைவினை தொழிலாளர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர் இந்த பொருட்காட்சி அரங்கிற்கு இன்று பகல் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த கைவினைப் பொருட்கள் நுட்ப வேலைப்பாடுகளை கண்டு ரசித்தார். கைவினைக்  கலைஞர்களிடம் இதுபற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். இசை கருவிகளை இசைத்தும் மகிழ்ந்தார். மேலும், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உணவு கடையில் கடைக்கு முன்பு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார் இது  அங்குள்ள மக்களை மிகப்பெரிய வியப்பிற்கு உள்ளாக்கியது. மேலும், அங்கு பிரதமர் மோடியுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் பிரதமர் மோடிக்கு ஒவியங்களை பரிசு அளித்தனர். இவ்வளவு சிறப்பு மிக்க பொருள்காட்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தந்தது  கைவினைக் கலைஞர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

மூலக்கதை