பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வை…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வை…

பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வை சரிசெய்ய சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வங்கிகளின் வர்த்தக யுக்தியை மாற்றியமைக்குமாறு அவற்றின் இயக்குனர் வாரியங்களை நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இருதரப்புக்கும் நலம் பயக்கும் வகையில் வங்கிகளை இணைப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கென தன்னாட்சி அதிகாரம் பெற்ற வங்கி வாரிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கித் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அலுவலகம் சாராத இயக்குனர்களை நியமிப்பதிலும் இந்த அமைப்பு ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை