அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

தினகரன்  தினகரன்
அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அடுத்த வாரம், 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறுகையில், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். ஆமதாபாத்தில் என்னை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் மைதானம் வரை 7 லட்சம் பேரை நிறுத்த உள்ளனர். எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும். உலகின் மிகப் பெரிய மைதானம் திறக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார். பிப்.,24 ம் தேதி பிற்பகல் குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப் மைதான திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கும் டிரம்ப் செல்ல உள்ளார். அன்று மாலை டெல்லி வரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. போன வருடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த கூட்டத்திற்கு மத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ட்ரம்ப் இந்தியாவின் சிறந்த நண்பர் என்று கூறியிருந்தார். இந்தியாவுடன் வெகு சீக்கிரத்தில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனக் கருதுகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை