வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு: கேரள காங்கிரஸ் மாஜி அமைச்சர் சிவகுமார் மீது போலீசார் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு: கேரள காங்கிரஸ் மாஜி அமைச்சர் சிவகுமார் மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கேரள முன்னாள் அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மற்றும் தேவசம்போர்டு அமைச்சராக இருந்தவர் சிவகுமார்.

தற்ேபாது திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

பினாமி பெயரில் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சிவகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமான ராஜேந்திரன், டிரைவர் ஷைஜூஹரன், ஹரிக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகுமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை