சீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,185ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 200 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹூபெய் மாகாணம் வூகான் நகரில் மருத்துவத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா  என்ற கோவிட் -19 வைரசால் 75,213  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மருத்துவ பணியாளர்கள் 3,019 பேர்.

1257 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்தவர்களில் 1219 பேருக்கு நடந்த பரிசோதனை முடிந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 454 ஆக இருந்தது. தொடர்ந்து நடந்த பரிசோதனை முடிவுகளில் புதிதாக 88 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால்கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 542 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென சீன நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதையேற்று வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை