கொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலியான 2வது நபர் ஆவார். கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதில் ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் ஹாங்காங்கில் கொரோனா வைரசுக்கு 2-வது நபர் பலியாகி இருக்கிறார். 70 வயது முதியவரான அவர் கடந்த 12-ந் தேதி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி அவர் இன்று இறந்தார். இதன்மூலம் சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை