தேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை

தினகரன்  தினகரன்
தேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை

சென்னை: அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் 38-வது அகில இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. கடந்த 37 போட்டிகளில் பங்கேற்காத தமிழ்நாடு காவல்துறை, இந்த ஆண்டு முதல்முறையாக பங்கேற்றது. துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்ஜய் தலைமையில் களமிறங்கிய தமிழக அணி 3 பதக்கங்கள் மற்றும் ஒரு கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக குதிரை ஏற்ற போட்டியில் பங்கேற்ற முதல் பெண் காவலர் என்ற பெருமையை தமிழக அணி வீராங்கனை சுகன்யா பெற்றுள்ளார். பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளை தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதி பராட்டினார்.சர்வதேச போட்டியில் தமிழக சப்-இன்ஸ்பெக்டர்விருதுநகர் மாவட்டம், மொட்டை மலை சிறப்பு இலக்கு படைப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான வேக நடை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடந்த இந்தப்போட்டியில் 5000 மீட்டர் தொலைவை 28நிமிடம், 30 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் விரைவில் கனடாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வேக நடை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். சாதனை வீரர் கிருஷ்ணமூர்த்தியை தமிழக காவல்துறை அதிகாரிகள், சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை