ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு 5 வெள்ளி, 6 வெண்கலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு 5 வெள்ளி, 6 வெண்கலம்

தாஷ்கண்ட்: ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா ஐந்து வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களைப் பெற்றது.

45 கிலோ எடை பிரிவில், கேவிஎல் பவானி குமாரி இளைஞர் பெண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். சித்தாந்தா கோகோய் சிறுவர்கள் மற்றும் ஜூனியர் ஆண்கள் போட்டிகளில் 61 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார்.



பின்னர், 49 கிலோ பிரிவில் முகுந்த் அஹெர் இளைஞர் சிறுவர் பிரிவில் ஒரு வெள்ளி வென்றார். 45 கிலோ பிரிவில் ஹர்ஷாதா கவுட் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

வெண்கலப் பதக்கங்களை வென்றவர் பட்டியலில் 55 கிலோ பிரிவில் போனி மங்க்க்யா, 59 கிலோ பிரிவில் நிர்மலா தேவி, 49 கிலோ பிரிவில் எஸ். குருனைடு மற்றும் 55 கிலோவில் கோலம் டிங்கு ஆகியோர் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 197 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

.

மூலக்கதை