நடிக்க தடை விதிக்கப்பட்டதால் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்: கேரளாவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிக்க தடை விதிக்கப்பட்டதால் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ஷேன் நிகம் தற்போது மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஷேன் நிகம்.

இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வெயில் என்ற படத்தில் நடிக்க ரூ40 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

ஆனால் ஷேன் நிகம் அதைவிட கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு பட தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்துள்ளார்.

இதையடுத்து ேஷன் நிகம் அந்த படத்துக்கு டப்பிங் பேச மறுத்து விட்டார். இதற்கிடையே அந்த படத்தில் கதாபாத்திரத்துக்காக சிகை அலங்காரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று இயக்குனர் கூறி இருந்தார்.

ஆனால் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து ஷேன் நிகம் தனது முடியை வெட்டிவிட்டார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஜோபி ஜார்ஜ் புகார் ெசய்தார். இதையடுத்து வெயில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் தங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ேஜாபி ஜார்ஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஷேன் நிகம் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இது தொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதையடுத்து ஷேன் நிகம் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஷேன் நிகம் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.



அதில் நடந்த சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும், வெயில் படத்துக்காக பேசப்பட்ட ரூ. 40 லட்சத்தில் பாக்கித்தொகை ரூ. 16 லட்சம் தனக்கு வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதற்கு ஜோபி ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று பதில் கடிதம் எழுதியுள்ளார்.


.

மூலக்கதை