கீழடியில் நாளை 6ம் கட்ட அகழாய்வு: முதல்வர் துவக்கி வைக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கீழடியில் நாளை 6ம் கட்ட அகழாய்வு: முதல்வர் துவக்கி வைக்கிறார்

திருப்புவனம்: கீழடியில் நாளை 6ம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக இடத்தை சுத்தம் செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. முதல் மூன்று கட்ட அகழாய்வு பணியை மத்திய தொல்லியல் துறையினர் நடத்தினர்.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இதில் பழங்கால பொருட்கள், கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன.

இவை 2,600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வில் தெரியவந்தது.

இதனிடையே 6ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அகழாய்வு செய்யும் இடத்தை தயார் செய்யும் பணி நேற்று தொடங்கியது.   முதல்வர் காணொலி காட்சி மூலம் பணியை தொடங்குவதற்கு வசதியாக தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

5ம் கட்ட அகழாய்விற்கு இடம் வழங்கிய மாரியம்மாள் நிலத்தின் அருகில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது.

தொல்லியல் துறை ஊழியர்கள் தங்குவதற்கு கருப்பையாவின் நிலத்தில் டென்ட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

.

மூலக்கதை