திருப்பதி கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

தினகரன்  தினகரன்
திருப்பதி கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 250வது படிக்கட்டில் மான் ஒன்றை சிறுத்தை தாக்கி சாப்பிட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் சந்திரகிரி இருந்து ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்களை காலை 7 மணிக்கு மேல் மட்டுமே அனுமதிக்கப்படும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மூலக்கதை