மகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு முழுவதும் மதுவிலக்கு...மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு

தினகரன்  தினகரன்
மகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு முழுவதும் மதுவிலக்கு...மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு

புதுடெல்லி: நாடு முழுவதும் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். டெல்லியில் ‘மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார்.  அப்போது அவர் பேசியதாவது: நாடு தழுவிய அளவில் மதுவை தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். இது மகாத்மா காந்தியின் விருப்பம்; மதுபானம்  உயிர்களை அழிக்கிறது. கடந்த காலங்களில் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது.ஆனால் படிப்படியாக பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டன. இது பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரால் திணிக்கப்பட்டது. ஆனால், அவர் அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011ல் பீகாரில் மதுவிலக்கு விதிக்கத்  திட்டமிட்டது. இறுதியாக 2016ம் ஆண்டில் அதனை அமல்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதுவிலக்கை உறுதி செய்யும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்முறைகள் பின்பற்றப்பட்டு  வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை