மகளிர் உலகக்கோப்பை டி20 இந்தியா - பாக். பயிற்சி ஆட்டம் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளிர் உலகக்கோப்பை டி20 இந்தியா  பாக். பயிற்சி ஆட்டம் ரத்து

பிரிஸ்பேன்: மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப். 21ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருந்தது.

ஆனால் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே கடும் மழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நாளை (பிப்.

18) நடக்கவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


.

மூலக்கதை