பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்த தலைமை நிர்வாகி ராஜினாமா: நிதி அதிகாரியும் விலகியதாக தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்த தலைமை நிர்வாகி ராஜினாமா: நிதி அதிகாரியும் விலகியதாக தகவல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முதல் தலைமை நிர்வாகி ராகுல் ஜோஹ்ரி, ஏப். 2016ல் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே வாரியத்தின் நிர்வாக செயல்பாட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

சமீபத்தில் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுைகயில், ‘ராகுல் ஜோஹ்ரி நிர்வாக அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

எதிர்காலத்தில் அவரது திட்டங்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் தனது மின்னஞ்சலை யாருக்கு அனுப்பினார் என்பது எங்களுக்குத் தெரியாது.

ஆனால் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்திருப்பது உறுதி. ஜோஹ்ரியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும்.



ஆனால் அதற்கு சில நாட்கள் ஆகலாம்’ என்றன. பிசிசிஐ மீதான மேட்ஜ் பிக்சிங் புகாரையடுத்து குழுவில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த 2017ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டது.

தற்போது பிசிசிஐ-க்கு புதிய தலைவர் சவுரவ் கங்குலி நவம்பரில் நியமிக்கப்பட்ட பின்னர், நிர்வாகிகள் குழுவின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தது. அதனால், பிசிசிஐ-யில் இருந்து வெளியேற ஜோஹ்ரி முடிவு செய்ததாக தெரிகிறது.

தற்போது ராகுல் ஜோஹ்ரியை தொடர்ந்து தலைமை நிதி அதிகாரி சந்தோஷ் ரங்னேகரும் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை