ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் கபில் மீதான புகார் தேவையற்றது: நெறிமுறைகள் அதிகாரி அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் கபில் மீதான புகார் தேவையற்றது: நெறிமுறைகள் அதிகாரி அதிருப்தி

புதுடெல்லி: ‘ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்தாக புகாரை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அதுபோன்ற பதவிகளிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான புகார் தேவையற்றது’ என்று பிசிசிஐ நெறிமுறைகள் அதிகாரி டி. கே. ஜெயின் தெரிவித்துள்ளார். பிசிசிஐ உடனான தனது ஒரு வருட ஒப்பந்தத்தின் கடைசி மாதத்தில் இருக்கும் டி. கே. ஜெயின், ஏற்கனவே கிரிகெட் ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா ரங்கசாமி மற்றும் அன்ஷுமான் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராக ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பதாக டிசம்பர் மாதத்தில் புகார் அளித்திருந்தார்.

அதேபோல், கபிலும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

கபில் மீதும் இரட்டை பதவி புகார் இருந்ததால், அவர் ஆலோசனை குழுவில் இருந்து விலகினார்.

ஆனால், ‘கபிலுக்கு எதிரான புகார் தேவையற்றது’ என்று தற்போது டி. கே. ஜெயின் தெரிவித்துள்ளார். மும்பையில் டிச.

27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சாந்தா ரங்கசாமி, கெய்க்வாட் மற்றும் கபில் ஆகியோரை ஆதாயம் தரும் இரட்டை பதவி புகாரை தொடர்ந்து தனிப்பட்ட விசாரணைக்கு டி. கே. ஜெயின் அழைத்திருந்தார். ஆனால் உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனிப்பட்ட காரணங்களால் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை