ஒரு நாள் தொடரில் மோசமான தோல்வி இவங்களுக்கு என்னாச்சு..! இணையத்தில் ரசிகர்கள் கலாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு நாள் தொடரில் மோசமான தோல்வி இவங்களுக்கு என்னாச்சு..! இணையத்தில் ரசிகர்கள் கலாய்ப்பு

வெலிங்டன்: நியூசிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி 3-0 என இழந்தது.

ஆனால் முன்னதாக நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என இந்திய அணி வென்றது. இதற்கு பின்னர் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இவ்வளவு மோசமாக இழக்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

தற்ேபாது நியூசிலாந்து நாட்டில் உள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்.

21ம் தேதி துவங்குகிறது. அதற்காக இந்திய அணி, நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி, பிரித்வி ஷா ஆகியோருடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்றை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘புது போஸ்ட் அழகான நண்பன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் மூன்று வீரர்களும் வித்தியாசமான முறையில் முக பாவனைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கையான செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் மூவரையும் கிண்டலடித்தும், ‘இவங்களுக்கு என்னாச்சு? ஒரு டாக்டர் குழுவை நியூசிலாந்துக்கு அனுப்பிவையுங்கப்பா!’ என்றெல்லாம் பதிவிட்டுள்ளனர்.

வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், ஏற்கனவே இத்ெதாடரில் பங்கேற்காத ரோஹித் ஷர்மா காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

இதனால் பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் ஆகியோர் துவக்கம் அளிக்க காத்திருக்கின்றனர். ஒருநாள் தொடரில் இந்த ஜோடி இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவிலான துவக்கத்தை அளிக்கவில்லை.

அதனால், அனைவரின் பார்வையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களின் துவக்கம் எப்படி இருக்கும் என்பதை நோக்கி திரும்பியுள்ளது.

.

மூலக்கதை