சீனாவில் பலி 1770 ஆனது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் பலி 1770 ஆனது

பீஜிங்: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹூபெய் மாகாணம் வூகான் நகரில் மருத்துவத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா  என்ற கோவிட் -19 வைரசால் 71,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 3000 ஆண்டு பழமையான மருந்துகளை கொடுத்து குணப்படுத்த முயன்று வருகிறது.

அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுவதால், பாரம்பரிய சீன மருத்துவர்கள் சுமார் 2200 பேர் ஹுபெய் மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே 3,711 பேருடன் ஜப்பான் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

அந்த கப்பலில் 132 பணியாளர்கள், 6 பயணிகள் என 138 இந்தியர்களும் உள்ளனர். அமெரிக்கர்களை மீட்க அந்நாடு முயற்சி மேற்கொண்டுள்ளது.


.

மூலக்கதை