டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

தினகரன்  தினகரன்
டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

புதுடெல்லி: டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புல் பிரஹலத்பூரில் இன்று அதிகாலையில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர். அப்போது, போலீசார் இருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து விழுந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த காரவால் நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டரால் டெல்லியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் பெண் டாக்டரை கொலை செய்த நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை