மறுக்கும் கியாரா; வெறுக்கும் நடிகர்கள்

தினமலர்  தினமலர்
மறுக்கும் கியாரா; வெறுக்கும் நடிகர்கள்

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி, பாலிவுட் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், தெலுங்கில் தயாரிக்கப்படும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை மறுத்து வருகிறார்.


நடிகர் பவன் கல்யாண் நடிக்க, இயக்குநர் கிரிஷ் இயக்கும் ஒரு படத்தில் கியாரா அத்வானியை நடிக்க வைக்க கிரிஷ் முயற்சித்தார். அதற்கு கியாரா மறுப்பு தெரிவிக்கவே, கிரிஷ், பவன் கல்யாண் ஆகியோர், கியாரா மீது கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் ஒரு படத்திலும் நடிக்க கியாரா மறுத்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.

மூலக்கதை