அக்னி நட்சத்திரத்தில் மோதும் உதயா, விதார்த்

தினமலர்  தினமலர்
அக்னி நட்சத்திரத்தில் மோதும் உதயா, விதார்த்

மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரத்தில் பிரபுவும், கார்த்திக்கும் மோதியது போன்று தற்போது தயாராகி வரும் அக்னிநட்சத்திரத்தில் உதயாவும், விதார்த்தும் மோதுகிறார்கள். இருவரும் மோதும் சண்டை காட்சிகள் வேலூர் கோட்டை மற்றும் மருத்துவமனையில் 4 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் சிவா சண்டை காட்சிகளை அமைத்தார். 100 துணை நடிகர், நடிகைகளும், 50 சண்டை கலைஞர்களும் பங்கேற்று நடித்தனர்.


இந்தப் படத்தை உதயா தயாரிக்கிறார். எஸ்.டி.சரண் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஸ்மிருதி வெங்கட், ஸ்ரீபல்லவி ஹீரோயின்கள். இவர்கள் தவிர விவேக், சாம்ஸ், நடிக்கிறார்கள் எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் பிரசாத் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் படம் வெளிவருகிறது.

மூலக்கதை