பயணங்கள் தொடர்கிறது தலைப்பு மாற்றம்

தினமலர்  தினமலர்
பயணங்கள் தொடர்கிறது தலைப்பு மாற்றம்

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் பயணங்கள் தொடர்கிறது. தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு பயணங்கள் தொடர்கிறது என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.. ஆனால் தற்போது 'தாய் நிலம்' என மாற்றப்பட்டு உள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் அபிலாஷ் கூறியதாவது:

உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம்.. பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவானபின் அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய்நிலம்தான். அப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும் அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக இது உருவாகி இருப்பதால் இதற்கு 'தாய் நிலம்' என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என தற்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. என்றார்.

மூலக்கதை