டைட்டிலுக்கு எதிர்ப்பு: பணிந்த பற இயக்குனர்

தினமலர்  தினமலர்
டைட்டிலுக்கு எதிர்ப்பு: பணிந்த பற இயக்குனர்

பச்சை என்கிற காத்து என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பற. இவர் தற்போது இயக்கி வரும் படம் பற. இதில் சமுத்திரகனி, சாந்தினி, நித்தீஸ், வீரா, முனீஷ்காந்த், சாஜுமோன், சாவந்திகா உள்பட பலர் நடித்துள்ளனர். சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசை அமைத்துள்ளார்.


இந்தப் படத்தின் டைட்டில் ஜாதி குறியீடாக இருப்பதாக பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் படத்தின் தலைப்பை எட்டுத்திக்கும் பற என்று மாற்றி உள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கீரா கூறியதாவது:

இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. பற என்றால் கூட, பறத்தலாக பார்க்காமல் சாதியாகப் பார்ப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வருத்தமான, உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.

அதனால் படத்தின் டைட்டிலின் உண்மையான பொருளை விளக்கும் வண்ணம் எட்டுத்திக்கும் பற என்று மாற்றி உள்ளோம். ஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்த விசயம் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. படமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் தலைப்பில் திருத்தம் கொண்டு வந்தோம். என்றார்.

மூலக்கதை