இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. கொழும்புவில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனியார்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. கொழும்புவில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனியார்

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கொழும்புவில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு துப்புரவு பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயணிகள் இருக்கையின் கீழ் 5 கிலோ எடைக் கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தங்க பிஸ்கட்டுகள் இருந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் தற்போது சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை